மீண்டும் புத்துயிர் பெறுகின்றது தியாகி திலீபனின் நினைவிடம்!

தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைப்பு செய்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அதியுச்ச அரசியல் வடிவமாக தமிழர்களின் அரசியல் விடுதலையினை பெற்றுக்கொள்வதற்காக அகிம்சை வழியில் உண்ணா நோன்பிருந்து தன்னையே ஆகுதியாக்கியவர் தியாகி திலீபன்.

அவரது நினைவிடம் இன்றைய தினம் மீண்டும் அதே வடிவத்தில் அதே இடத்தில் மீள்கட்டுமாணம் மேற்கொள்வதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாநகர சபையினால் இன்றைய தினம் குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

யாழ். மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் நிறுவப்பட்டிருக்கும் இச்சூழ்நிலையில் அவர்களது முதலாவது உத்தியோகப்பூர்வ வேலைத்திட்டமாக இவ்விடயம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

மானிட விடுதலையை நேசித்து இம்மண்ணில் உறங்கிக் கொண்டிருக்கும் மாவீரம் என்றுமே எம் மக்களால் மறக்கப்பட மாட்டாது என ஜனநாயக போராளிகள் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.