ரணிலிற்கான ஆதரவை அறிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம், தற்போது நாடாளுமன்றில் நடைபெற்று வருகின்றது.

குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிரான செயற்பாடே, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை என தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் நீடித்துள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

அதனை தோற்கடிப்பதற்கான முயற்சியாகவும் இப்பிரேரணை அமைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சாடியுள்ளார்.

தற்போதைய சூழலில், நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கான அவசியமும் அதன் பின்னணி என்ன என்பது குறித்தும் சகலருக்கும் தெரியுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியுள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்குமா இல்லையா என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்திருந்த நிலையில், பிரதமருக்கு சாதகமாக எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.