அதிருப்தி வெளியிட்ட சம்பந்தன்: அரசாங்கம் கொடுத்த வாக்குறுதி!

பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம் உறுதி வழங்கியுள்ளதாக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இலங்கை தொடர்ந்தும் சீர்திருத்த பாதையில் பயணிக்குமென தாம் நம்புவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர்கள் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தூதுக் குழுவினர் பல்வேறு தரப்புகளையும் சந்தித்து பேசி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து பேசியிருந்தனர். இந்த சந்திப்பின் போது போது இரா. சம்பந்தன் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தூதுக் குழுவினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.