கிராஞ்சி மீனவர்களுக்கு இடையூராக காணப்படும் இந்திய ரோலர்கள்: பா.உ சிறீதரனிடம் முறையிட்டனர்!

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்படும் இந்திய ரோலர்கள் கிராஞ்சி கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் தொழில் செய்யும் கிராஞ்சி மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக பா.உ சிறீதரனிடம் முறையிட்டனர்.

இவ் விடயம் தொடர்பாக பா.உ சிறீதரன் கிராஞ்சி மீனவர்களுடன் நேரடியாக சென்று பார்வையிட்டு அதற்கான தீர்வு பற்றியும் மேலும் தொழிலாளர்களின் தேவைகள் கலந்துரையாடினார்.