பச்சிலைப்பள்ளி பிரதேசசபை கூட்டமைப்பு வசம்!

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேசசபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகியுள்ளது.

இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு பச்சிலைப்பள்ளி பிரதேசசபை மண்டபத்தில் வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.

முன்னதாக தவிசாளர் தெரிவுக்கு கோரப்பட்டபோது இலங்கை தமிழரசு கட்சியின் சுப்பிரமணியம் சுரேன் தெரிவு செய்யப்பட்டார்.

மாற்றுத் தெரிவுகள் இருக்கிறதா? என உள்ளூராட்சி ஆணையாளர் வினவிய போது,

கேடயச் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிவித்தனர்.

பின்னர் ஏனைய தெரிவுகள் இல்லாத நிலையில் சுப்பிரமணியம் சுரேன் பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் தவிசாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து உபதவிசாளர் தெரிவிலும் போட்டியின்றி தமிழரசுக் கட்சியின் முத்துகுமார் கஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.