கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து விளக்குகிறார் சுமந்திரன் எம்.பி.!

உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈபிடிபி உள்ளிட்ட எந்தக் கட்சியுடனும் ஒப்பந்தங்களையும் செய்யவில்லை.யாருடனும் கூட்டிணைவோ அல்லது யாரோடும் சேர்ந்து கூட்டாட்சியைiயும்அமைக்கவில்லை.

அவ்வாறு நாங்கள் கூட்டிணைவு அல்லது கூட்டாட்சி என்று ஊடகங்கள்கூறுவது அர்த்தமற்றது என்பதுடன் அடிப்படையில்லாத செய்திகள் என்றும்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் பிரதான வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை(07) நடாத்தியஊடகவியலாளர் சந்திப்பின் போது சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கருத்துவெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும்தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தக் கட்சியோடும் கூட்டாட்சி அல்லது ஒப்பந்தம்செய்துள்ளதா என்று சகல சபைகளையும் ஆராய்ந்து பார்த்தால் தெரியுமென்றுகுறிப்பிட்டுள்ள சுமந்திரன், அவ்வாறு ஆராய்ந்து பார்த்து கூட்டிணைவு என்றுயாராவது கண்டுபிடித்தால் அவருக்கு பரிசில் வழங்குவதாகவும் சுமந்திரன்தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றங்களில் நிர்வாகங்களை அமைக்கும் செயற்பாடுகள் தொடங்கிய முதல்நாளே ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள்முன்னிணயும், ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியும் போட்டியிட்டது.

ஆனால் தேர்தல்முடிவடைந்த பின்னர் நான் ஒரு விடயத்தைக் கூறியிருந்தேன்.அதாவது உள்ளுராட்சி மன்றங்களில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத காரணத்தால்எந்தெந்தக் கட்சி எங்கு எங்கு எல்லாம் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ளதோஅங்கெல்லாம் அவர்கள் ஆட்சிமைக்க ஏனைய கட்சிகள் அதற்கு ஆதரவை வழங்க வேண்டுமெனக்கோரியிருந்தேன்.

ஆயினும் இந்தக் கோட்பாட்டின் பிரகாரம் ஒழுக மாட்டோமென உள்ளுராட்சி மன்றங்களைஅமைக்கும் முதல்நாளிலேயே அவர்கள் செயலில் காட்டியிருந்தனர்.

ஆகையினால் நாம்மட்டும் அந்தக் கோரிக்கையை தனியாக அதனைக் கடைப்பிடிக்க முடியாது என்பதால்நாமும் அதற்கு மாறான செயற்பாடுகளை முன்னெடுத்து சசாவகச்சேரி மற்றும்பருத்தித்துறை உள்ளிட்ட சபைகளையும் கைப்பற்றியிருக்கின்றோம்.

இதனை வைத்து ஈபிடிபி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டமைப்பு கூட்டிணைவு,கூட்டாட்சி, கூட்டு என்றெல்லாம் ஊடகங்கள் அடிப்படை இல்லாத செய்திகளைவெளியிட்டிருந்தன. இவை எல்லாவற்றுக்குமாக நெடுந்தீவுப் பிரதேச சபையில் ஆட்சியைகூட்டமைப்பு கைப்பற்றியதனூடாக பதில் தெரிய வந்திருக்கும்.

மேலும் உள்ளுராட்சி மன்றங்களில் எந்தக் கட்சியோடும் கூட்டமைப்பு கூட்டாட்சிஅமைக்கவில்லை. அவ்வாறு கூட்டாட்சி அமைப்பதாயின் தலைவர் மற்றும் பிரதித் தலைவர்என்பன பங்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான ஒப்பந்தங்கள் ஏதும்இல்லாத படியால் இங்கு அவ்வாறு ஏதுமே நடக்கவில்லை. ஆனால் கூட்டமைப்பின்பங்காளிக் கட்சிகளுக்கிடையே அவ்வாறு இருக்கின்றது.

ஆகவே கூட்டமைப்பு ஈபிடிபியோடோ அல்லது வேறு கட்சிகளினுடனோ கூட்டாட்சி அல்லதுகூட்டிணைவு அல்லது கூட்டரசாங்கம் என்று சொல்வதில் அர்த்தமில்லை.

ஆகவே இதனைகூட்டிணைவு கூட்டாட்சி என்று இதனை ஒவ்வொரு சபையாக ஆராய்ந்து பார்த்து அவ்வாறுஇருக்கிறது என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசொன்றையும் கொடுக்கலாம்.

ஒரு சபையில் வாக்களிக்கின்ற ஒரு கட்சி அடுத்த சபையில் எங்களுக்கு எதிராகவாக்களிக்கிறது. அதுவே நான் சொல்வதற்கு ஆதாரம்.

நாங்கள் சொன்ன கோட்பாட்டின்பிரகாரம் நாங்கள் ஒழுகுவதற்கு கடைசி வரையும் தயாராக இருந்தோம். ஆனால்மாநகர சபையில் நடந்ததன் பிரகாரம் நாங்கள் அதனை ஒழுக முடியாமல் போயிருந்தது.

குறிப்பாக வேலணையில் எங்களுக்கு அதிக ஆசனம் இருந்தும் ஈபிடிபி மகிந்தவின்தாமரை மொட்டோடு சேரந்து எங்களிடத்தில் இருந்து தட்டிப்பறித்த செயற்பாடுகள்எல்லாம் நடைபெற்றிருக்கிறது.இப்பொழுது ஆட்சியமைக்கிற ஒழுங்குமுறைகள் முடிவிற்கு வந்த கொண்டிருக்கிற போதுஒழுங்கான முறையில் இந்தச் சபைகள் அனைத்தும் இயங்க வேண்டுமென்பது தான்கூட்டமைப்பின் நோக்கமாக இருக்கிறது.

அதற்கு எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்துமக்களுக்கு அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுக்கிற இந்த உள்ளுராட்சிமன்றங்களின் ஆட்சிகள் முடங்காமல் இருக்கின்ற வகையில் செயற்படுவதற்கு பூரணஒத்துழைப்பை கொடுக்க வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கை.

ஆகவே நாங்கள் ஆட்சிமையக்காத சபைகளிலும் ஆட்சியமைத்தவர்களுக்கு நாங்கள் ஆதரவைவழங்குவோம் அதே போன்று மற்றவர்களும் மக்கள் சேவையைக் கருத்தில் கொண்டுசெயற்படுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம் என்றார்.