முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேசசபைக்கான தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகளுக்காக 40 ஆண்டுகளுக்குப் பின் நேற்று கரைதுறைப் பற்று பிரதேசசபை கூடியது.
உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் கூடிய அமர்வில் ஈ.பி.டி.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க, ஸ்ரீலங்கா பொது மக்கள் முன்னணி என்பன கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கியிருந்தன.
தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பன நடுநிலைமை வகித்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிசாளர் வேட்பாளராக கனகையா தவராசாவை முன்மொழிந்தது. பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கனகையா தவராசா 17 வாக்குகளையும், சுயேட்சைக்குழு வேட்பாளராகிய ஜோசப் அமலதாஸ் 3 வாக்குகளையும் பெற்றனர்.
உப தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் இ.ரவீந்திரன் தெரிவானார்.