வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் குறித்து இப்போது தீர்மானிக்க முடியாது: இரா. சம்பந்தன்!

வட மாகாண சபைக்கான அடுத்த தேர்தலின் போது, முதலமைச்சராக நிறுத்தப்படவுள்ளவர் குறித்து தற்போது தீர்மானிக்க முடியாது என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு ஒருமாத காலம் போதும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண சபைக்கான அடுத்த தேர்தலின் போது முதலமைச்சர் வேட்பாளராக தற்போதையை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்பட மாட்டார் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,

“அரசியல் தீர்வு காணும் விடயம் ஏற்கனவே தாமதமாகியுள்ளது. நாட்டின் அனைத்து மக்களுக்கும் இது தேவையாக உள்ளது. இனியும் இந்த விடயம் தீர்க்கபடாவிட்டால் நாடு வீணாகிடும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.