வட மாகாண பதில் முதலமைச்சராக நாளை பதவியேற்கும் கல்வி அமைச்சர்!

வட மாகாண பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் நாளை பதவியேற்கவுள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இரண்டு வார பயணமாக இன்று இந்தியா சென்றுள்ளார்.

இந்நிலையில் வட மாகாண பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் நாளை பதவியேற்கிறார்.

பத்தரமுல்லவில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உப அலுவலகத்தில் நாளைக் காலை 10.30 அளவில் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் க.சர்வேஸ்வரன் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.