தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிஷ்டத்தின் மூலம் கிடைத்த நீதி: செல்வம் அடைக்கலநாதன்!

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று ஊடகங்களிற்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதிகளவான மக்களினால் வாக்களிக்கப்பட்டு கூடுதலான அங்கத்தவர்களை கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிஷ்டத்தின் மூலம் நீதி கிடைத்திருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எங்களை வன்னி மண்ணிலே அழித்து ஒழித்து நிர்க்கதியாக்கிய பொதுஜன பெரமுனவுக்கும் அதனோடு சேர்ந்து ஆதரவு தெரிவித்தவர்களுக்கும் தோல்வி ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எங்களை முற்றாக ஒழிக்க நினைக்கும் மகிந்த ராஜபக்சவுடனும், அவரின் சின்னத்திலும் நின்று ஆட்சியை பிடிக்க நினைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவது என்பதை ஒரு போதும் எங்களது மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.