தமிழ் மக்களின் உரித்தை எவரும் தட்டிப் பறிக்க முடியாது: செல்வம் அடைக்கலநாதன்!

தமிழ் மக்களுக்கு கிடைத்த எதிர்க்கட்சி உரித்தை எவரும் தட்டிப்பறிக்க முடியாது என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் முல்லைத்தீவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்க்கட்சி பதவியினை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கோருகின்ற சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி பதவியினை இழக்க நேரிடுமா?

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்று சொல்லப்படுகின்ற அமைப்பு ஸ்ரீலாங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது.

ஸ்ரீலாங்கா சுதந்திரக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இன்றுவரை ஆட்சி அமைத்துள்ளது.

இந்த ஆட்சி தொடரும் நிலையில் தமிழ் மக்களுக்கு கிடைத்த எதிர்க்கட்சி உரித்தை எவரும் தட்டிப்பறிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.