சிறீதரன் பா.உ தலைமையில் நெடுந்தீவு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்!

நெடுந்தீவு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினரும் நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான எஸ். சிறிதரன் தலைமையில் நெடுந்தீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

இதில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் சி. ஜெயகாந்த், வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்னம்,

நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளர், உதவி தவிசாளர் உள்ளிட்ட குறித்த பிரதேசத்தின் அரசியல் பிரதிநிதிகள், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், கிராம சேவகர்கள், புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் போக்குவரத்து, குடிதண்ணீர், கல்வி, சுகாதாரம், மீன் பிடி, விவசாயம் போன்ற துறைகளில் காணப்படும் குறைபாடுகள் ஆராயப்பட்டன.