வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் மனைவி உயிரிழந்தார்!

வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் மனைவி சரோஜினிதேவி உயிரிழந்துள்ளார்.

இவர் தனது 68ஆவது வயதில் நேற்று இரவு காலமாகியுள்ளார்.

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரின் இறுதிக் கிரியைகள் கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் நாளை மறுதினம் இடம்பெறும் என குடும்பத்தார் அறிவித்துள்ளனர்.