வட மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
விவசாய திணைக்களத்தினூடாக ஏழு இலட்சத்து 60,000 ரூபா பெறுமதியில் 50 விவசாயிகளுக்கு விவசாய உபகரணத் தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது மருந்து தெளிக்கும் கருவி, நீர் இரைக்கும் இயந்திரம், சீமெந்து பக்கற்றுக்கள் உட்பட பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை விவசாய திணைக்களத்தினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.