கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தின் இவ்வருடத்திற்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றது.

கூட்டத்தின் இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில், பூநகரி பிரதேச செயலாளர் சி.ச.கிருஸ்னேந்திரனின் அறிமுக உரையுடன் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.

இதன்போது, பல்வேறு அபிவிருத்தி வேலைகளின் முன்னேற்றம் பற்றிய மீளாய்வு மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

மேலும், மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, த.குருகுலராஜா தவிர வேறு எவரும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என குறிப்பிடப்படுகின்றது.