பாரதிபுர மக்களைச் சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

கிளிநொச்சி பாரதிபுரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை கிராம மக்கள் சந்தித்து கலந்துரையாடி தமது தேவைகள் குறித்து எடுத்துக் கூறியுள்ளனர்.

பாரதிபுரம், மலையாளபுரம், பொன்நகர், அறிவியல்நகர் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்களும் பொது அமைப்புக்களும் பாரதிபுரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களை அழைத்து கலந்துரையாடி தமது காராமத்தின் அடிப்படைத் தேவைகள் குறித்தும் எடுத்துக் கூறியிருந்தனர்.

இக் கலந்துரையாடலில் கிராமங்களின் வீதி புனரமைப்பு, குடிநீர் வசதி, வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு போன்ற பல விடயங்கள் மக்களால் முன்வைக்கப்பட்டு ஆராயப்பட்டதுடன் அவற்றைச் செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்பட்டது.

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுடன் கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், கரைச்சிப் பிரதேச சபை செயலாளர் க.கம்சநாதன், மேற்படி கிராமங்களின் அமைப்பாளர்கள் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.