கிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில், பல்வேறு பொது அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கிளிநொச்சி முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் தற்போது குறித்த கூட்டம் நடைபெற்று வருகின்றது.

நிகழ்வின் முன்னதாக நாச்சிக்குடா சந்தியிலிருந்து தொழிலாளர்களுக்கு எதிரான அடக்கு முறைகளை சித்தரிக்கின்ற ஊர்திகளுடன் பேரணியாக முழங்காவில் விநாயாகர் விளையாட்டுக்கழக மைதானத்தைச் சென்றடைந்து அங்கு மே நாள் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சரவணபவன், சிவஞானம் சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, த.குருகுலராஜா, மற்றும் பச்சிலைப்பள்ளி, பூநகரி, கரைச்சி, ஆகிய பிரதேசசபைகளினுடைய தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.