திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்திற்கான மே தினக் கூட்டம் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சி. தண்டாயுதபாணி தலைமையில் குறித்த மே தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டன.

இதன்போது, இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட செயலாளர் கனகசிங்கம் மே தின பிரகடனத்தை அறிவித்துள்ளார்.

மேலும், குறித்த நிகழ்வின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முக்கிய பிரமுகர்கள், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஜெனார்த்தனன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.