குமாரசுவாமிபுரம் அ.த.க பாடசாலை வகுப்பறை கட்டடம் திறந்து வைப்பு!

கிளிநொச்சி – குமாரசுவாமிபுரம் அ.த.க பாடசாலையில் 4.5 மில்லின் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட குறித்த கட்டடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் கிளிநொச்சி வலயக் கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்துள்ளனர்.

இந்த நிகழ்வில் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.