த.தே.கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் நெஞ்சு துணிவில்லாதவர்கள்!

எமது சொந்த மண்ணில் சென்று குடியேற வேண்டும் என்பதை முதன்முதலில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சார்பில் நான் முன்வைத்திருந்தேன் என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

உங்களை இந்த பிரதேசத்தில் மீள் குடியேற்றியதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 100வீத பங்களிப்பு உண்டு, இதனை மறுப்பவர்கள், விமர்சிப்பவர்கள் நெஞ்சுத் துணிவில்லாதவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலமாக, தமது சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் என போராட்டம் செய்து இப்போது சொந்த தமது சொந்த ஊரில் அடியெடுத்து வைத்திருக்கும் இரணைத்தீவு மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் சென்று சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் உரையாற்றியிருந்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,