முகமாலைக்கு பா.உ சிறீதரனின் நிதிப்பங்களிப்பிலும் பிரதேச சபையின் ஒருங்கமைப்பிலும் மின்சாரம் வழங்கல்!

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் முகமாலைக் கிராமத்திற்கான மின்சார இணைப்பு வேலைகளுக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முடிவுற்று,
மின்சார இணைப்பிற்காக அந்தக் கிராமம் ஆவலுடன் காத்திருந்த வேளையிலும் புகையிரதத் திணைக்களத்தினரின் புகையிரதப் பாதையைக் கடப்பதற்கான அனுமதிகள் இதுவரையில் மின்சார சபையினருக்கு கிடைக்காமையினால்,

மக்களின் வேண்டுகோளையும், தேவையையும் கருத்தில் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் தனது சொந்த நிதியில் பாதையமைத்து மாற்று வழியினூடாக முகமாலைக் கிராம மக்களுக்கு மின்சார இணைப்பை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

ஏற்கனவே புகையிரதப் திணைக்களத்தினரின் அனுமதியைப் பெற்ற வேறு மின் இணைப்பு மார்க்கத்திலிருந்து முகமாலைக் கிராம மக்களுக்கு மின்சார இணைப்பை மிக வேகமாக வழங்கும் நோக்கோடு,

மின்சார சபையினரின் அனுமதியைப் பெற் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி.சிறீதரன் அவர்கள் இன்றைய தினமே தனது நிதியில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைவர் கௌரவ சு.சுரேன் அவர்களின் மேற்பார்வையில் உடனடியாகவே பாதையமைத்துக் கொடுத்துள்ளார்.

இந்த மின் வழங்கல் சேவைக்காக பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைவர் கௌரவ சு.சுரேன், மின்சார சபையின் பொறியியலாளர், பிரதேச சபையின் உறுப்பினர்கள், கிராம அலுவலர், பொது அமைப்புக்களினுடைய பிரதிநிதிகள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடனர்.