கட்டுக்கரை குளம் தொடர்பான வேலைத்திட்ட பணிப்பாளருடன் சார்ள்ஸ் நிர்மலநாதன் சந்திப்பு

இந்த விடயம் தொடர்பாக விவசாயிகளினால் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்க பண்டாரவுக்கு, சார்ள்ஸ் நிர்மலநாதன் எடுத்து கூறி இதனால் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கியுள்ளார்.

உடனடியாக இராஜாங்க அமைச்சர் இந்த திட்டத்திற்குரிய திட்டப்பணிப்பாளருடன் தொடர்புகொண்டு கட்டுக்கரை குளத்தின் பிரதான கால்வாய் வேலைகள் தொடர்பாக தனக்கு அறிக்கை தரும்படி கேட்டுள்ளார்.

அதன் பிரகாரம் நேற்று முன்தினம் திட்டப்பணிப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலனாதனுடன் கட்டுக்கரை குளத்தின் பிரதான கால்வாய் பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து அந்த கால்வாய் வேலைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

அத்துடன் மற்றும் கால்வாய் மொத்தம் 26 கிலோமீற்றர் தூரமுடையது.

அதில் 8 கிலோமீற்றருக்கான வேலைகள் மாத்திரமே ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகுதி வேலைகள் வழங்கப்படவில்லை. காரணம் நிதிப்பற்றாக்குறை என கூறப்பட்டது.

தான் உடனடயாக இது தொடர்பான அறிக்கையை இராஜாங்க அமைச்சருக்கு வழங்குவதாக கூறினார். மேலும் கால்வாய் வேலைகள் நிறைவுறும்பட்சத்தில் கட்டுக்கரை குளத்திற்க்கு அதிகமான நீரை சேமிக்க முடியும்.

இதனால் எமது பகுதி விவசாயிகள் நன்மை அடைவார்கள் என்பதை திட்ட பணிப்பாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எடுத்து கூறியுள்ளார்.