வட, கிழக்­கில் வங்கிக் கிளை­களை அதி­க­ரிப்­ப­தன் நோக்­கம் என்ன? சிறீ­த­ரன் கேள்­வி­?

தொழிற்­சாலை இல்­லாத, பொரு­ளா­தா­ரம் சீரற்ற நிலை­யி­லுள்ள வடக்கு – கிழக்­கில் வங்­கிக் கிளை­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தன் நோக்­கம் என்ன? குத்­தகை நிறு­வ­னங்­க­ ளும் அதி­க­மாக உள்­ளன.

வடக்கு – கிழக்­கில் 2009 ஆம் ஆண்­டுக்கு முன்பு இருந்­ததை விட­வும் தற்­போது வங்­கிக் கிளை­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. பொது மக்­க­ளின் பணத்தை உறிஞ்­சு­வ­தற்கே இவ்­வ­ளவு கிளை­கள் வடக்கு – கிழக்­கில் திறக்­கப்­பட்­டுள்­ளன. இது அர­சின் திட்­ட­மிட்ட செயற்­பாடா என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறீ­த­ரன் கேள்­வி­யெ­ழுப்­பி­னார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று வியா­ழக்­கி­ழமை மக்­கள் விடு­தலை முன்­னணி தலை­வ­ரும் எதிர்க்­கட்­சி­யின் பிர­தம கொற­டா­வு­மான அநு­ர­கு­மார திசா­நா­யக்க கொண்டு வந்த நுண் நிதி நிறு­வ­னங்­கள் தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை மீதான விவா­தத்­தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,நுண் நிதி நிறு­வ­னங்­க­ளின் மிலேச்­ச­ன­த­ன­மான செயற்­பா­டு­கள் மோச­மாக உள்­ளன. வடக்கு கிழக்­கில் மாத்­தி­ர­மின்றி தற்­போது தெற்­கி­லும் அதன் தாக்­கம் அதி­க­ரித்­துள்­ளது. போரால் பாதிக்­கப்­பட்ட மக்­கள் திண்­டா­டும் நிலை­யில் வீட்டு தேவைக்­கா­க­வும் வாழ்­வா­தா­ரங்­க­ளுக்­காக மக்­கள் கடன் பெறு­கின்­ற­னர். இத­னைப் பயன்­ப­டுத்தி பகல் கொள்­ளை­யில் நிதி நிறு­வ­னங்­கள் ஈடு­ப­டு­கின்­றன.

யாழ்ப்­பா­ணத்­தில் 6 லட்­சம் மக்­கள் வாழ்­கின்­ற­னர். அங்கு சுமார் 136 வங்கி கிளை­கள் உள்­ளன. வடக்கு கிழக்கு மாகாண எல்­லை­யில் உள்ள மாவட்­ட­மொன்­றில் 1 இலட்­சம் மக்­க­ளுக்கு 23 கிளை­கள் உள்­ளன. பொது­வாக வங்கி அடர்த்­தி­யின் படி 17 வங்கி கிளை­களே இருக்க வேண்­டும். அது­தான் இலங்­கை­யின் நிதி ஏற்­பா­டா­கும்.

ஆனால் தொழிற்­சாலை இல்­லாத, பொரு­ளா­தார சீரற்­றுள்ள வடக்கு – கிழக்­கில் வங்­கி­கள் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தன் நோக்­கம் என்ன? குத்­தகை நிறு­வ­னங்­க­ளும் அதி­க­மாக உள்­ளன. பொது மக்­க­ளின் பணத்தை உறிஞ்­சு­வ­தற்கே இவ்­வ­ளவு கிளை­கள் வடக்கு கிழக்­கில் திறக்­கப்­பட்­டுள்­ளது. இது அர­சின் திட்­ட­மிட்ட செயற்­பா­டா­கும்.

2009ஆம் ஆண்­டுக்கு முன்பு வடக்­கில் 26 வங்கி கிளை­க­ளும் கிழக்­கில் 52 கி‍­ளை­க­ளுமே இருந்­தன. ஆனால் தற்­போது பன்­ம­டங்கு அதி­க­ரித்­துள்­ளது. எந்த நோக்­கத்­துக்­காக இது உரு­வாக்­க­ப­பட்­டுள்­ளது. வடக்­கின் தற்­கொ­லை­கள் அதி­க­ரிப்­பின் பின்­னால் நிதி நிறு­வ­னங்­க­ளில் தாக்­கம் உள்­ளது.

கடன் தீர்­வுக்கு அரசு விடு­விப்பு வழங்க வேண்­டும். இல்­லா­வி­டின் கால அவ­கா­சம் வழங்க வேண்­டும். வடக்கு கிழக்கு மக்­கள் போரின் தாக்­கத்தை விட­வும் கடன் பிரச்­சி­னை­யா­லும் நுன்­நிதி நிறு­வ­னங்­க­ளின் செயற்­பாட்­டி­னா­லும் பெரும் பாதிப்­புக்கு உள்­ளா­கி­யுள்­ள­னர். இந்­தப் பிரச்­சி­னைக்கு உடன் தீர்வு காண அரசு தலை­யீடு செய்ய வேண்­டும்.

தமி­ழர்­க­ளின் பண­மும் சொத்­து­க­ளும் அர­சின் வைப்­பு­க­ளில் உள்­ளன. தமி­ழர்­கள் நுண்­நிதி நிறு­வன தாக்­கத்­தி­னால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். வடக்கு கிழக்­கில் அரசு திட்­ட­மிட்டு இந்­தக் காரி­யங்­கள் செய்­கின்­றதா?. பொது மக்­க­ளின் கடன் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண வேண்­டும் – என்­றார்.