தாய்மை உணர்வில் அமைச்சர் விஜயகலா பேசியிருக்கலாம்! வியாழேந்திரன் எம்.பி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போர் காலத்தில் இல்லாத சமூக விரோத செயற்பாடுகள் தற்போது அதிகரித்து காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

இன்று வடக்கு, கிழக்கில் அதிகளவான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இருந்தும் அந்த பகுதிகளிலேயே குற்றச் செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

வித்தியாவில் தொடங்கி இன்று ரெஜினா வரையில் பாலியல் துஸ்பிரயோகங்கள் நடந்துள்ளன. அத்துடன், வாள்வெட்டு உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளும் அறங்கேறி வருகின்றன.

இந்நிலையிலேயே, வடக்கு மாகாண மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும், தாய்மை உணர்விலும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகள் குறித்து பேசியிருந்தார்.

இது தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.