பூநகரி கரடிக்குன்றில் 40 இலட்சம் பெறுமதியான அறநெறிப் பாடசாலைக்கு அடிக்கல் நாட்டிவைப்பு!

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட நாச்சிக்குடா கரடிக்குன்று நாகபூசணி அம்மன் கோவிலுக்கு 4.0 மில்லியன் பெறுமதியில் அறநெறிப்பாடசாலைக்கான அடிக்கல் இன்று ஞாயிற்றுக் கிழமை 2019/02/03 நண்பகல் 2.30 மணிக்கு நாட்டப்பட்டது.

குறித்த நிகழ்வில் அடிக்கல்லினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ், கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் வைபவரீதியாக நாட்டிவைக்க அவரைத்தொடர்ந்து பூநகரி பிரதேச செயலாளர் சி.ச.கிருஸ்னேந்திரன், பூநகரி பிரதேச சபை உப தவிசாளர் சி.சிறிரஞ்சன், குமுழமுனை பங்குத்தந்தை சுமன் அடிகளார் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடிக்கல்லை நாட்டினர்.

தொடர்ந்து இவ் நிகழ்வில் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.