மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ஆசிரியர்இ பெற்றோர் இடைத்தொடர்பு மிக முக்கியம்! பசுபதிப்பிள்ளை

மாணவர்களது கல்வி மேம்பாட்டில் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான இடைத்தொடர்பென்பது மிகமுக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது என வடமாகாணசபையின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஊற்றுப்புலத்தில் தெரிவித்தார்.

கிளிநொச்சி ஊற்றுப்புலம் அ.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நேற்றைய தினம் மாலை 1.30 மணிக்கு பாடசாலை அதிபர் ம.உமாசங்கர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வடமாகாணசபையின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சு.பசுதிப்பிள்ளை அவர்கள் மேற்படி கருத்துக்களைத் தெரிவித்தர்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், விளையாட்டு என்பது ஒரு மனிதனது உடல், உளத்தை வளப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுகின்றது. மனிதன் மழிழ்ச்சியாக வாழ்வதற்கு உதவுகின்றது மனிதறர்களை நற்பண்புடையவராக வாழ்வதற்குப் பெரிதும் துணைபுரிகின்றது.

அந்த வகையில் பாடசாலைகளில் இணைபாடவிதான செயற்பாடுகளில் ஒன்றாகக் காணப்படும் விளையாட்டுச் செயற்பாடுகள் மாணவர்களது உடல், உள மேம்பாட்டில் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

இன்றைய தினம் இப்பாடசாலையில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டியில் எமது மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் உச்சாகமாகவும் செயற்பட்டதனை அவதானிக்க முடிந்தது.

ஊற்றுப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள இப்பாடசாலையில் பல்வேறுபட்ட வளப்பற்றாக்குறைகள் காணப்படுகின்றதனை அவதானிக்க முடிகின்றது போதிலும் இப்பகுதி பெற்றோர்களது ஆதரவுடனும் அதிபரது சீரான திட்டமிடப்பட்ட முகாமைத்துவத்தினூடாகவும் ஆசிரியர்களது அர்பணிப்பான செயற்பாடுகளின் மூலமும் மாணவர்களது கல்வி நிலையிலும் விளையாட்டுச் செயற்பாடுகளிலும் இந்தச் சிறுவர்கள் சிறப்புற்று விளங்குகின்றார்கள்.

விளையாட்டுச் செயற்பாடுகளின் மூலம் மாணவர்களது உள்ளமும் உடலும் உறுதியாக்கப்படுகின்றது. வெற்றியையும் தோல்வியையும் சமமாக மதிக்கின்ற பெரிய பண்பை விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் எமது மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றது.

இதனால் இந்தச் சிறுவர்கள் எதிர்காலத்தில் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வாழக்கூடிய பண்பைப் பெற்றுக்கொள்கின்றார்கள் என்பதே உண்மை.

இவ்விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட எமது மண்ணின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் ஆசிரியராக, அதிபராக செயற்பட்டு கல்விக்குப் பெரும் பங்காற்றியவர் தற்போதும் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு எமது மாணவரச் செல்வங்கள் கல்வியில் மேம்பாடடைய வேண்டும் என்பதற்காக தன்னாலான பெரும்பங்களிப்பை ஆற்றி வருகின்றார்.

இப்பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களது சேவை மிகவும் போற்றத்தக்க அர்ப்பணிப்பானது. ஏனெனில் போக்கு வரத்து உள்ளிட்ட பல்வேறுபட்ட வளப் பற்றாக்குறைகளைக் கொண்ட இக்கிராமப்புறப் பாடசாலைக்கு வந்து கற்பிக்கின்ற ஆசிரியர்களது செயற்பாடு மிகவும் உயர்ந்த அர்ப்பணிப்பானது.
அதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தின் தூரப் பகுதிகளிலிருந்து வந்து இங்குள்ள மாணவர்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியர்களது சேவை என்றென்றும் நன்றியுணர்வுடன் போற்றிப் பேணத்தக்கது.

இங்குள்ள அனைத்து ஆசிரியர்களுமே சிறந்த முறையில் செயற்படுகின்றார்கள். ஒரு பாடசாலை எப்படிச் செயற்பட வேண்டும் என்பதற்கு இப்பாடசாலையின் செயற்பாடுகள் எடுத்துக்காட்டாக அமைகின்றன.