வடக்கிற்கு ஒரு சட்டம் கிழக்கிற்கு ஒரு சட்டம் இருக்க முடியாது! யோகேஷ்வரன்!

வடக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு கட்டம் கட்டமாக நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும்போது கிழக்கு மாகாகண தொண்டர் ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள், தொண்டர் ஆசிரியர்கள் தொடர்பில் வடக்கு மாகாணத்திற்கு ஒரு சட்டம், கிழக்கு மாகாணத்திற்கு ஒரு சட்டம் இருக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிங்கபாரதேப்பு சரஸ்வதி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் நேற்றைய தினம் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் செய்த குறைபாடு காரணமாக கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு ஆசிரியர பற்றாக்குறையை எதிர்நேக்குகின்றது. மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக மாகாண கல்வி பணிப்பாளர், ஆளுநர், மற்றும் மத்திய கல்வி அமைச்சரோடு பேச இருக்கிறோம். ஆசிரியர் பற்றாக்குறையோடு தொடர்ந்தும் பாடசாலைகள் இயங்க முடியாது.

கடந்த மாகாணசபை ஆட்சியில் கல்வி அமைச்சு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்தது ஆனால் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக புதிய அரசியல் யாப்பின் மூலம் மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றிய 445 தொண்டர் ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமனம் வழங்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சந்தித்து கேட்டுள்ளோம்.

வடமாகாணத்தில் இரண்டு தடவை தொடண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது மீண்டும் நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. வடக்கு மாகாணத்திற்கு ஒரு சட்டம் கிழக்கு மாகாணத்திற்கு வேரொரு சட்டம் என்று அல்ல. பாகுபாடு காட்டமுடியாது.

களுவன்கோணி கிராமத்துக்கான பிரதான வீதி செப்பனிடுவதற்கு தேசிய அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநயக்கவினால் அடிக்கல் நடப்பட்டு மூன்று வருடங்கள் கடந்த நிலையில் எந்தவித செயற்பாடுகளும் நடைபெறவில்லை.

அன்மையில் நடைபெற்ற பிரதமர் தலைமையிலான அபிவிருத்திக் கூட்டத்தில் இந்த வீதி செப்பனிட வேண்டும் என வலியுறுத்தினேன் விரைவாக செப்பனிட்டுத் தருவதாக கூறியுள்ளார்கள்.

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதன் காரணமாக தற்போது பல அபிவிருத்தி பணிகள் நடைபெறுகின்றன. எங்களிடம் இலஞ்சம் இல்லை, ஊழல் இல்லை ஒதுக்கிடப்படும் நிதி சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.