தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்!

ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரனும், கே.வி.தவராசாவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி மாநாட்டில் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

யாழ். சட்டநாதர் வீதி, நல்லூரில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி காலை 9 மணியளவில் இம் மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

இம் மாநாடு முன்னணியின் தலைவர் க.பிருந்தாவன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன் போது யாழ். தந்தை செல்வா சதுக்கத்தில் அமைந்துள்ள தமிழரசின் தந்தை மூத்த அறிஞர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் சிலைக்கு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மலர்மாலை மற்றும் மலரஞ்சலி செலுத்த உள்ளனர்.

வாழ்த்துரையை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் சட்டத்தரணியுமான கி.துரைராஜசிங்கம் வழங்க உள்ளார்.

பிரதான உரையை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா வழங்க உள்ளார்.