கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் யாழிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சித் தலைவரும், பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வேட்பாளருமான மாவை சேனாதிராசா தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தேர்தல் விஞ்ஞாபனத்தை மாவை சேனாதிராசா வெளியிட்டு வைத்து விஞ்ஞாபனத்திலுள்ள உள்ளடக்கம் முழுவதையும் ஒப்புவித்தும் உரையாற்றினார்.

இதேவேளை, மேற்படி நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் சார்பாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்மக்களுடைய அரசியல் தீர்வு மற்றும் பொருளாதார மேம்பாடு என்பன முக்கியமான முன்மொழிவுகளாக உள்ளடக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.