வரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்

இன்றைய தினம் கிளிநொச்சி நகர் பகுதியில் அமைந்துள்ள பசுமைப் பூங்காவில் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
இது ஒரு தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கின்ற ஜனநாயகப் போர் இதனை எதிர்கொள்ள தன்மானத் தமிழ்ர்கள் அனைவரும் தயாராகுங்கள் தமிழர்களின் பிரதிநிதிகளாக இருந்த விடுதலைப் போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் பல நாடுகள் சேர்ந்து அடித்து மௌனிக்க வைத்தார்கள் அதன் பின்னர் அடுத்து யார் தமிழர்களை வழிநடத்தப் போகிறார்கள் வழிநடத்துகிறார்கள் என இலக்கு வைத்த அரசு. தமிழ்த் தேசியத்தை அழிக்க தமிழர்களின் இருப்பை அழிக்க தமிழ்ர்களின் தேசிய அடையாளத்தை அழிக்க தமிழர்களின் ஏக பிரதிநிதிகளான தமிழ்தேசியக் கூட்டமைப்பை சிதைக்க வேண்டும் என்று ஓர் திட்டத்தை முன்வைத்தது

அதற்கு தமிழர்களின் வாக்குக்களை சிதைக்க பல்வேறு கட்சிகளை இன்று களத்திலே இறக்கி தமிழ்தேசிய இருப்பை அழிக்க சிங்களம் கங்கணம் கட்டி நிற்கிறது தமிழர்களே விழிப்பாக இருங்கள் தமிழ்ர்கள் தமிழர்களாக இருக்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் இருக்கிறார்கள் என்ற செய்தியை தேர்தலில் சிங்கள இனவாத அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் காட்டவேண்டும் தமிழர்களை விலைபேச முடியாது என சிங்களத்திற்கும் அவர்களது முகவர்களுக்கும் உரக்க சொல்ல தமிழ்த் தேசிய அடையாளத்தை காக்க வரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே என அறைகூவல் விடுக்கின்றேன்

என மேலும் தெரிவித்துள்ளார்

குறித்த பிரச்சாரக் கூட்டமானது நடைபெறவுள்ள பாராளுமன்ற மன்ற தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதாரித்து

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிக் கிளையின் ஏற்ப்பாட்டில் இன்று மாலை 6 மணியளவில் கிளிநொச்சி நகர் பகுதியில் அமைந்துள்ள பசுமைப் பூங்காவில் குமரகுரு குழுமத்தலைவரும் கட்சியின் முக்கிய செயற்பாட்டளருமாகிய கண்பதிப்பிள்ளை ஆனந்தவடிவேல் தலமையில் நடைபெற்றது

இப் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா,ஆ.சுமந்திரன்,கு.சுரேந்திரன்,ஆர்னோல்ட் மற்றும் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் குருகுலராஜா,பசுபதிப்பிள்ளை,கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிதன்,பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன்,பூநகரி பிரதேச சபை தவிசாளர் ஐயம்பிள்ளை, பிரதேச சபைகளின் உறுப்பினர்கள்,கட்சியின் அமைப்பாளர்கள் மக்கள் என ஐயாயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் கொண்டனர்.